தாய் பாசம்

Go down

தாய் பாசம்

Post by RoSe on Mon Jun 03, 2013 4:03 am


அணுவளவும் தீங்கில்லா
அன்பு போற்றிடும்
அன்னையின் அன்பிற்கு நிகரேது ....!
பக்கபலமாய் பல உறவிருந்தாலும்
அன்னை உறவிற்கு இணையேது....!!


அதிகாலை எழுந்து
அடுக்களை களைந்து
அமுது படைத்து
அன்பாய் மழலை செல்வத்தை
அன்பு பாராட்டி , நீராட்டி
சீராட்டி சீருடை அணிவித்து
படைத்த அமுதை பக்குவமாய் அளித்து
புத்தகப்பையை தன தொழில் சுமந்து
பள்ளி வாசல் வரை வந்து
பள்ளிக்கு அனுபிவைத்தாலும்
பிள்ளை கவனமாய்
கல்வி கேள்விகளில்
கண்ணும் கருத்துமாய் உள்ளதா,
களைத்த வேளையில் உணவுண்டதா என்று
கவலையில் ஆழ்பவள் அன்னை .........!


அந்திசாயும் மாலை பொழுதினில்
பள்ளி முடிந்து வரும் பிள்ளையை
சுணக்கம் காமிக்காமல்
வணக்கம் சொல்லி
அன்பு ஒன்றே பிரதானமாய்
அன்பாய் அரவணைத்து
பரிவுகாட்டி, பள்ளியின்
அன்றைய நிகழ்வுகளை கேட்டறிந்து
பாடங்களை படிக்கவைத்து
படுத்துறங்க சென்றாலும்
அனுதினமும் தொடர்கிறது
அன்னையின் தவிப்பு ...!
அது பிள்ளையின் எதிர்காலம்
பற்றிய கணிப்பு ...!!

_________________
avatar
RoSe
Admin

Posts : 34
Points : 92
Join date : 30/05/2013
Age : 48

Back to top Go down

Re: தாய் பாசம்

Post by harsheeta on Thu Jun 06, 2013 12:22 pm

awesome rose Smile

harsheeta
New bee

Posts : 20
Points : 30
Join date : 29/05/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum